பிளஸ் 2 – காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 86% தேர்ச்சி

வேலூர்: காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 86 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

அரசுத்தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 320 மாணவிகள் தேர்வு எழுதினர்.  அவர்களில் 275 பேர் தேர்ச்சி பெற்றனர் . இது 86சதவிகித தேர்ச்சி ஆகும்.

கடந்த ஆண்டு 85 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர் இந்த ஆண்டு ஒரு சதவிகிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் பொதுப்பாடப்பிரிவில் தாவரவியல், புள்ளியியல், கணினிஅறிவியல், புவியியல் தொழிற்கல்வி பிரிவில் தணிக்கையியல் ஆகிய பாடங்களில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மேலும் உயிரியல், கணினி பயன்பாடு ஆகிய இரண்டு பாடங்களில் 97 சதவிகிதமும், தமிழ், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய நான்கு பாடங்களில் 96 சதவிகிதமும், பொருளியல் பாடத்தில் 94 சதவிகிதமும், விலங்கியல் 91,   வரலாறு – 90, வணிகவியல் – 86, கணக்குப்பதிவியல் 85 சதவிகித மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தலைமையாசிரியர் கோ.சரளா, உதவி தலைமையாசிரியர் டி.என்.ஷோபா, தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், மற்றும் முதுகலை ஆசிரியர்கள், கனினி ஆசிரியை உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.ஆனந்தன் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.