திருவேடகத்தில் கபசுர குடிநீர் விநியோகம்

சோழவந்தான், ஜூலை 16: திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மதுரை தனிச்சியம், வெற்றி சித்த மருத்துவமனை & ஆராய்ச்சி மையமும் இணைந்து திருவேடகம் மற்றும் திருவேடகம் காலனி ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கு வீடுதோறும் சென்று கபசுரக்குடிநீர் வழஙகின.

கல்லூரி செயலர் சுவாமி வேதானந்தா மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்தா, வெற்றி சித்த மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி சரவணன் மற்றும் சித்த மருத்துவர்கள் அனுராதா, யோகேஸ்வரி, திருவேடகம் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வை கல்லூரி முதல்வர். வெங்கடேசன் துவக்கி வைத்தார்.

நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்லபாண்டியன், சந்திரசேகரன், காமாட்சி, செல்லத்துரை, ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு, கல்லூரி பேராசிரியர்கள் சீனிமுருகன், சேர்வார்முத்து, அசோக்குமார், தினகரன், கணேசன், ரகு, சௌந்தரராஜ், மோகன்ராஜ், மாரிமுத்து, பாலகிருஷ்ணன், கார்த்திகேயன், அலுவலர் விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.