ஜுனியர் ரெட்கிராஸ் சேவைக்கு பாராட்டு

வேலூர்: கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் கபசுரகுடிநீர் விடைத்தாட்கள், முன்னேற்ற அறிக்கை சமர்பிக்கும் முகாமிலும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு மைய முகாமிலும் கபசுரகுடிநீர் ஜுனியர் ரெட்கிராஸ் சார்பில் வழங்கியதற்காக வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் மு.அங்குலட்சுமி பாராட்டினார்.

பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடங்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாட்கள், முன்னேற்ற அறிக்கை மற்றும் சரிபார்ப்பு படிவங்கள் சார்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வேலூர் சத்துவாச்சாரி எத்துராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முகாமில் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சா.மார்ஸ் ஆலோசனையின்படி மாவட்டக்கல்வி அலுவலர் மு.அங்குலட்சுமி முகாம் பணியில் உள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் 3வது நாளாக கபசுரகுடிநீர் வேலூர் கல்வி மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் மற்றும் காட்பாடி ரெட்கிராஸ் கிளையுடன் இணைந்து வழங்கினார்.
தலைமையாசிரியர்கள் ஜெயதேவரெட்டி, அறிவழகன், சுரேஷ் உதவியாளர் பிரபுலிங்கம் பள்ளி துணை ஆய்வாளர் எ.மணிவாசகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் வேலூர் கல்வி மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் கே.குணசேகரன், உள்ளிட்டோர் கபசுரகுடிநீர் வழங்க உதவினர்.
முகாமில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியரல்லா பணியாளர்கள், ஆவணங்கள் ஒப்படைக்க வந்த தலைமையாசிரியர்கள், இருபால் ஆசிரிய பெருமக்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.
பாராட்டு
காட்பாடி தொன்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் 10ஆம் வகுப்பு / 11ஆம் வகுப்பு விடைத்தா ள் சரிபார்ப்பு மையம் சத்துவாச்சாரி எத்துராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கொரோனா தடுப்புப்பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பணி, தன்னார்வலர் பணி, முகாமில் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு கபசுர குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவைப்படும்போது கொடுத்து பணியாற்றிய ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பாளர், நிர்வாகிகள், தன்னார்வர்கள்,உறுப்பினர்கள் அனைவருக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டக்கல்வி அலுவலர் மு.அங்குலட்சுமி பாராட்டு தெரிவித்தார்.

விடைத்தாட்கள், முன்னேற்ற அறிக்கை சமர்பிக்கும் முகாமில் கபசுரகுடிநீர் வழங்கியதற்காக ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனனை பாராட்டி சான்றிதழ் வழங்கிய வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் மு.அங்குலட்சுமி. பள்ளி துணை ஆய்வாளர் எ.மணிவாசகன், தலைமையாசிரியர்கள் எஸ்.எஸ்.சிவவடிவு, ஜெயதேவரெட்டி, அறிவழகன், சுரேஷ் உதவியாளர் பிரபுலிங்கம் ஆகியோர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.