ஜியோவின் அறிமுகம் ‘ஜியோமீட்’
கொரொனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் நீடித்துவரும் நிலையில், காணொலி மூலம் உரையாடுவது பல மடங்கு அதிகரித்துவிட்டது.
இந்நிலையில், ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது. ‘ஜூம், கூகுள் மீட், ஹவுஸ்பார்ட்டி போன்ற நிறுவனங்களுக்கு ஈடாக ‘ஜியோமீட்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலவச பிளானில் 5 பேருடன் உரையாடலாம். பிசினஸ் பிளானில் 100 பேருடன் கூட உரையாடலாம்.
ஆண்ட்ராய்டு, ஐ- போன் உள்ளிட்டவைகளிலும், விண்டோஸ், மேக் மென்பொருள் கொண்ட கணினிகளிலும் இதை பயன்படுத்தலாம். கூகுள் குரோம் மூலமும் ஜியோமீட்டிங்கில் இணையலாம் என ஜியோ தெரிவித்துள்ளது
You must log in to post a comment.