ஜெயலலிதா வாரிசுகள் தீர்ப்பில் திருத்தம்


சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகள் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016 டிசம்பரில் காலமானார். இந்நிலையில் அவர் வாழ்ந்த போயஸ் தோட்டம் மற்றும் பிற சொத்துக்கள் உள்பட ரூ.913 சொத்துக்கள் யாரிடம் செல்லும் என்ற கேள்வி எழுந்தது.


இந்நிலையில், ஜெயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.


ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி அதிமுகவை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு இல்லாததால் இந்திய வாரிசுரிமை சட்டப்படி, அவரது உறவினர்களான தீபா, தீபக் ஆகியோரை சட்டப்பூர்வமான இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்த நீதிமன்றம், ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவும் கருத்து தெரிவித்தது.


அத்துடன் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக அதை ஏன் மாற்றக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதுதொடர்பாக 8 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.


இந்நிலையில், ஜெயலலிதாவின் வாரிசுகள் தொடர்பான தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


அவர்கள் இருவரையும் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்த நிலையில் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் திருத்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.