ஜார்க்கண்ட் , கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்
புதுதில்லி: ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரிலும், கர்நாடக மாநிலம் ஹம்பியிலும் வெள்ளிக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஜாம்ஷெட்பூரில் அதிகாலை 6.55 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதன் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.7-ஆக இருந்தது என தேசிய நில அதிர்வு மையத்தின் தரவு தெரிவிக்கிறது.
ஹம்பியில் 4.0 ரிக்டர் அளவிலான லேசான நில நடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
You must log in to post a comment.