ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் மோதல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் வான்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர், ராணுவத்தினர், சிஆர்பிஎப் ஆகியன அடங்கிய கூட்டுக்குழு அப்பகுதியைச் சுற்றி வளைத்துள்ளது.
பயங்கரவாதிகளை இக்குழு பிடிப்பதற்கான முயற்சியில் பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு வருகின்றனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
You must log in to post a comment.