ஜமாபந்தியில் மனுக்கள் பெறும் நடைமுறை ரத்து

மதுரை: கொரோனா நோய்த் தொற்று காரணமாக 1429-ஆம் (2019-2020) பசலி ஆண்டுக்கான வருவாய்த்தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்வின் போது மனுக்கள் பெறும் நடைமுறையினை ரத்து செய்தும், 29.06.2020 முதல் 15.07.2020 வரை இணையதளம் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் தங்களது மனுக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் அவர்களது ஜமாபந்தி கோரிக்கை மனுக்களை அவர்களாகவே, இணையதள முகவரியிலோ அல்லது இ.சேவை மையங்கள் மூலமாகவோ 29.06.2020 முதல் 15.07.2020 முடிய பதிவேற்றம் செய்யலாம் எனவும் , அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தகுதியினடிப்படையில் அவை முடிவு செய்யப்படும் எனவும்,
அதனடிப்படையில் மனுதாரர்களுக்கு உரிய பதில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 29.06.2020 முதல் 26.07.2020 வரை மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை வடக்கு வட்டத்தில் பெறப்பட்ட 195 மனுக்களில் 52 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மதுரை மேற்கு வட்டத்தில் பெறப்பட்ட 115 மனுக்களில் 23 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வாடிப்பட்டி வட்டத்தில் பெறப்பட்ட 148 மனுக்களில் 19 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மதுரை கிழக்கு வட்டத்தில் பெறப்பட்ட 96 மனுக்களில் 4 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மதுரை தெற்கு வட்டத்தில் பெறப்பட்ட 51 மனுக்களில் 17 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலூர் வட்டத்தில் பெறப்பட்ட 56 மனுக்களில் 2 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் வட்டத்தில் பெறப்பட்ட 81 மனுக்களில் 8 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருமங்கலம் வட்டத்தில் 119 பெறப்பட்டுள்ளது. கள்ளிக்குடி வட்டத்தில் 48 மனுக்கன் பெறப்பட்டுள்ளது. உசிலம்பட்டி வட்டத்தில் 309 மனுக்கள் பெறப்பட்டுள்ளது, பேரையூர் வட்டத்தில் பெறப்பட்ட 89 மனுக்களில் 21 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மொத்தம் பெறப்பட்ட 1307 மனுக்களில் 146 மனுக்கள் தீர்வு காணப்பட்டு 1161 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

மதுரை மேற்கு வட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து , 2 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். இந்நிகழ்வில் ,மதுரை மேற்கு வட்டாட்சியர் பாண்டி, துணை வட்டாட்சியர்கள்,
வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.