ஐஸ்லாந்து தேசிய நாள்

சிறப்பு நாள்

ஐஸ்லாந்து – தேசிய நாள்
பாலைவனமாதல் மற்றும் வரட்சிக்கு எதிரான போராட்ட நாள்

பிற நிகழ்வுகள்

1579 – சேர் பிரான்சிஸ் டிரேக் “நோவா அல்பியன்” (கலிபோர்னியா) என்ற நாட்டை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார்.
1631 – முகலாய மன்னன் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் தனது 14-ஆவது மகப்பேறின் போது காலமானாள்.
1839 – ஹவாய் பேரரசில் கத்தோலிக்கர் தமது சமயத்தை வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
1885 – விடுதலைச் சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது.
1911 – செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுக் கொண்டார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியதை அடுத்து நட்பு நாடுகளின் படைகள் பிரான்சை விட்டு விலகத் தொடங்கின.
1940 – இரண்டாம் உலகப் போர்:லங்காஸ்ட்ரியா என்ற ஐக்கிய இராச்சியக் கப்பல் பிரான்சில் மூழ்கடிக்கப்பட்டதில் 4,000 பேர்  கொல்லப்பட்டனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் லிபியாவில் கப்பூசோ துறைமுகத்தை இத்தாலியார்களிடம் இருந்து கைப்பற்றின.
1940 – எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளை சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.
1944 – ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலை அடைந்து குடியரசானது.
1944 – பிரெஞ்சுப் படைகள் எல்பா தீவை ஜெர்மனியிடம் இருந்து விடுவித்தன.
1954 – குவாத்தமாலாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1948 – பென்சில்வேனியாவில் அமெரிக்க விமானம் கார்மெல் மலையில் மோதியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
1953 – பெர்லினில் கிழக்கு ஜெர்மனி அரசுக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1987 – மாலைநேர கடல் குருவியினத்தின் கடைசிக் குருவி இறந்ததில் அவ்வினம் முற்றாக அழிந்தது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.