இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடக்கம்


புதுதில்லி: நாடு முழுவதும் உள்நாட்டு விமானச் சேவை திங்கள்கிழமை தொடங்கியது.
கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்ட விமானச் சேவை மீண்டும் திங்கள்கிழமை அதிகாலை முதல் தொடங்கியுள்ளது. விமானச் சேவை தொடங்குவதையொட்டி அனைத்து விமான நிலையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை முழு வீ்ச்சில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் பயணிகள் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன.
அம்பன் புயல் பாதிப்பு காரணமாக மேற்கு வங்கத்தில் விமானச் சேவைகள் இயக்கப்படவில்லை. சென்னையில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை இன்டிகோ விமானம் தில்லி நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது.


இருப்பினும் முதல் நாளிலேயே சென்னையில் இருந்து புறப்படும் 15 விமானங்களும், சென்னைக்கு வரும் 13 விமானங்களும் ரத்தாகியுள்ளதாகத் தெரிகிறது. போதுமான பயணிகள் இல்லாததால் இந்த ரத்து என்றும் சொல்லப்படுகிறது.
திங்கள்கிழமை முதல் புறப்படும் விமானங்களில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதையொட்டி 260 பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானங்களில் அதிகபட்சம் 111 பயணிகள் மட்டுமே ஏற்றிச்செல்லப்படுவதாகவும் தெரிகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.