சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்

ரம்ஜான் பண்டிகை
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்.
ஆர்ஜென்டீனா – மே புரட்சி நாள்
சாட், லைபீரியா, மாலி, மவ்ரித்தானியா, நமீபியா, சாம்பியா, சிம்பாப்வே – ஆப்பிரிக்க விடுதலை நாள்
லெபனான் – விடுதலை நாள்

பிற நிகழ்வுகள்

1659 – ரிச்சார்ட் குரொம்வெல் இங்கிலாந்தின் “ஆட்சிக் காவலர் பெருமகன்” (Lord Protector) பதவியைத் துறந்தார்.
1810 – அர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின்போது ஆயுதம் தாங்கிய பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுநரை வெளியேற்றினர்.
1812 – இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் பலியாகினர்.
1837 – கியூபெக்கில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1865 – அலபாமாவில் “மொபைல்” என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1895 – போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது.
1953 – நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியை பரிசோதித்தது.
1955 – ஐக்கிய அமெரிக்காவில் கன்சாஸ் மாநிலத்தில் “உடால்” என்ற நகரை இரவு நேர சூறாவளி தாக்கியதில் 80 பேர் உயிரிழந்தனர்.
1961 – அப்பல்லோ திட்டத்தில் பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அதிபர் ஜான் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரஸில் அறிவித்தார்.
1963 – அடிஸ் அபாபாவில் ஆப்பிரிக்க ஒன்றியம் உருவானது.
1966 – எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1977 – ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.
1979 – ஐக்கிய அமெரிக்காவின் ட்சி-10 விமானம் ஒன்று சிகாகோவில் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 273 பேரும் பலியாகினர்.
1982 – போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலக் கப்பல் மூழ்கியது.
1985 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் பலியாகினர்.
1997 – சியேரா லியோனியில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
2000 – லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது.
2001 – அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
2002 – சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – மொசாம்பிக்கில் தொடருந்து விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் கொல்லப்பட்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.