தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நினைவு நாள்

சி. பா. ஆதித்தனார் (1905 – 1981) தமிழகத்தில் இதழியல் முன்னோடி. இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். இவர் 1981-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி தனது 76-ஆவது வயதில் காலமானார்.

இன்று எரித்திரியா: விடுதலை நாள்

பிற நிகழ்வுகள்
1543 – வானியலாளர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், வானியலாளர் மறைந்தார்.
1798 – அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின் எழுச்சி.
1844 – முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெர்ஜீனியாவின் அலெக்சாண்டிரியா நகரைக் கைப்பற்றினர்.
1883 – நியூயார்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
1901 – தெற்கு வேல்சில் விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகினர்.
1941 – இரண்டாம் உலகப் போரில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் “பிஸ்மார்க்” என்ற ஜெர்மன் போர்க்கப்பல் “ஹூட்” என்ற பிரித்தானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1956 – சுவிட்ஸர்லாந்தில் முதலாவது யூரோவிஷன் பாடல் போட்டி இடம்பெற்றது.
1962 – அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் -கார்ப்பென்டர் அவ்ரோரா 7 விண்ணூர்தியில் 3 முறை பூமியைச் சுற்றி வந்தார்.
1991 – எத்தியோப்பியாவில் இருந்து யூதர்களை இஸ்ரேலுக்குக் கொண்டு வரும் சாலமன் நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது.
1993 – எத்தியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை பெற்றது.
2000 – 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இஸ்ரேலியப் படையினர் லெபனானில் இருந்து வெளியேறினர்.
2000 – இலங்கையில் நார்வே தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.
2001 – எவரெஸ்ட் சிகரத்தை 15 வயது ஷெர்பா டெம்பா ஷேரி எட்டினார். இவர் அச்சிகரத்தின் உச்சியை எட்டிய வயதில் குறைந்தவர் ஆவார்.
2002 – ரஷ்யாவும் – ஐக்கிய அமெரிக்காவும் மாஸ்கோ உடன்பாட்டை எட்டின.
2006 – விக்கிமேப்பியா தொடங்கப்பட்டது.
2007 – ஈழப்போரின்போது யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் இலங்கைக் கடற்படைத் தளத்தைக் கடற்புலிகள் தாக்கி அழித்தனர்.
2007 – கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு ராணுவத்தினர் உயிரிழந்தனர். நால்வர் காயமடைந்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.