குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு நடவடிக்கை-முதல்வர் பழனிசாமி

சேலம்: தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் நாள்தோறும் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. புறநகர் பகுதிகளில் சிறு குறு தொழில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.
ஆட்டோக்கள் இயக்கவும், முடித் திருத்தும் நிலையங்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவக் குழு ஆலோசனையின்படி கொரோனா நோய்த் தொற்றை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொது மக்கள் வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது.


தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை. நோய்த் தடுப்பில் மருத்துவர்கள், செவிலியர்களின் பணி பாராட்டுக்குரியது.

அரசியல் ஆதாயம் தேடவே மு.க. ஸ்டாலின் அரசின் மீது புகார் தெரிவிக்கிறார். பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததால்தான் புகார் அடிப்படையில் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ் பாரதி இழிவாகப் பேசியபோதே கட்சி தலைவரான ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். இ-டெண்டரில் முறைகேடு என ஆர்.எஸ். பாரதி கூறியதில் உண்மையில்லை என்றார் முதல்வர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.