ஆர்.எஸ். பாரதிக்கு மே 31 வரை இடைக்கால ஜாமீன்

சென்னை: திமுக அமைப்பு செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் மே 31 வரை இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஆர்.எஸ். பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் அவர் நீதிபதிகள் குறித்தும் பேசியதும் சர்ச்சைக்குள்ளானது.
இதைத் தொடர்ந்து, ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண்குமார் என்பவர் ஆர்.எஸ். பாரதி மீது புகார் அளித்திருந்தார். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் ஆர்.எஸ். பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீஸர், ஆர்.எஸ். பாரதியை சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக அவரை மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

திமுக வழக்குரைஞர் அணியின் வாதங்களையும், அரசுத் தரப்பு வாதங்களையும் கேட்ட எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் மே 31 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதை அடுத்து இந்த ஜாமீன் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

ன்பகம் உள்ளரங்கத்தில் பேசியதாக ஒரு சர்ச்சையை எழுப்பி, அது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்து மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.