மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் வெளி வந்தது

பிற நிகழ்வுகள்
1430 – ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் பேர்கண்டியரினால் கைது செய்யப்பட்டார்.
1568 – நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1805 – நெப்போலியன் போனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினார்.
1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று “விடுவிப்பாளர்” எனத் தன்னை அறிவித்தார்.
1846 – மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.
1865 – வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.
1915 – முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை அறிவித்தது.
1929 – மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் “கார்னிவல் கிட்” வெளி வந்தது.
1949 – ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது.
1951 – திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கையெழுத்திட வைக்கப்பட்டார்கள்.
1958 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 பூமியுடனான தொடர்பை இழந்தது.
1981 – உடுமலை நாராயணகவி தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் மறைவு
1998 – புனித வெள்ளி உடன்பாட்டுக்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.