வைகாசி மாத பலன்கள்

கணிப்பு: “ஜோதிட ரத்னா”து.ராமராமாநுஜதாஸன்

மேஷம்

அனைத்து பணிகளிலும் பொறுமையுடன் வாக்கு தரும் பணம் பல வழிகளில் வரும் செலவும் பின்தொடரும்.
தேவையற்ற பொருட்களை வாங்குவதை – அதாவது வீண் ஆடம்பர கையாளுவது அவசியம் முடிந்தவரை வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
யாருக்காவது உதவி செய்கின்றேன் என வாக்கு தரும் முன் யோசித்து பொருட்களை வாங்குவது தவிர்த்தல் நன்று.

வாகன பழுது செலவு ஏற்பட்டு நீங்கும்.தங்கள் நீண்ட நாள் நினைத்திருந்த வீட்டை பராமரிக்க முயற்சி செய்வீர்கள். பூர்வீக சொத்து தானாக கைக்கு வந்து சேரும். குடும்ப பெரியவர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்று.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முடிந்தவரை வெளி உணவுகளை தவிர்ப்பது நன்று. புதிய நண்பர்களிடம் பழகும்போது அதிக கவனம் தேவை.
அதேப்போல் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது ஒரு முறைக்கு பலமுறை படித்துப் பார்ப்பது நன்று. தொழில் விஷயங்களில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கும்.
முடிந்தவரை உடன் பணிபுரியும் சக தொழிலாளி களிடம் அனுசரித்து செல்வது நன்று. சுப நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும் சில சுபகாரியங்கள் தங்கள் முன்னிலையில் நடைபெற பாக்யம் ஏற்படும்.
சில உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க சற்று தாமதம் ஆகும். விவசாயிகள் விளைச்சலில் மிகுந்த கவனம் செலுத்தவும். கால்நடைகள் மூலம் குறைந்த பலனே கிடைக்கும். அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
சிலருக்கு மேலிடத்திலிருந்து பாராட்டுகள் கிடைக்கும். கலைத்துறையினர் எதிர்பாராத அந்தஸ்தைப் பெறுவார்கள். கூடுதல் வருமானம் கிடைக்கும்.
பெண்மணிகளுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் மேலோங்கும். மாணவ மாணவிகள் விளையாட்டில் ஈடுபடுவது குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவும்.

ரிஷபம்

காரியங்களை நிறைவேற்ற மிகுந்த சிரமம் ஏற்படும். மன உறுதியுடன் செயல்களைச் செய்வீர்கள். இருப்பினும் கடன் தொல்லை ஏற்படாது. தூக்கமின்மை படிப்படியாக குறையும். யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது மிகவும் நன்று.

வருமானம் சற்று ஏற்றம் இறக்கமாக இருந்தாலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவி அவ்வப்போது கிடைக்கும். விருப்பமான கோயில்,குளம் சென்று மகிழ்வீர்கள்.
தொழிலாளிகளிடம் ஏற்பட்ட கருத்து மோதல்கள் நீங்கி நட்பு தொடரும். உடல் ஆரோக்கியம் கூடும். மருந்து மாத்திரைகள் பயன்படுவது குறையும். சிலர் நீண்ட நாளாக நினைத்திருந்த சேமிப்பு கணக்கை தொடங்குவார்கள்.
வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உபரி வருமானங்கள் இருப்பதால் சிலருக்கு பழைய வாகனத்தை மாற்றும் எண்ணம் ஏற்படும். இருப்பினும் தற்போது அந்த முடிவை ஒத்தி வைப்பது நன்று. அயல்நாட்டு தொடர்பு ஆதாயம் தரும்.
விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். மாணவ, மாணவிகள் நன்கு மதிப்பெண் பெறுவார்கள். அரசியல்வாதிகள் நற்காரியங்களை செய்து பொதுமக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள். அதனால் மேலிடத்தின் பாராட்டும் கிடைக்கும்.

மிதுனம்

எதிலும் அவசரப்படக்கூடாது, முடிந்தவரை அனைவரிடமும் கோபமாக பேசுவதைத் தவிர்க்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற இருக்கும். எனவே,செலவு செய்யும்போது கவனம் தேவை.
தோல் நோய் உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும். முடிந்தவரை வெளி உணவுகளை தவிர்ப்பது நன்று. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை உட்கொள்ளவேண்டும். சுய மருத்துவம் கூடாது.


பெண்கள் கணவரிடம் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளை செய்யும்போது எச்சரிக்கை தேவை. வியாபாரிகள் எதிலும் கருத்துடன் செயல்பட்டால் வரவில் சங்கடம் இருக்காது. மேலும் கணக்கு வழக்குகளில் கவனத்துடன் இருக்கவும் . சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தந்தைவழி உறவுகளின் மனக்கசப்புகள் ஏற்படலாம். உடன்பிறந்தார் அதை அனுசரித்து செல்ல வேண்டும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் இடம் கவனமாக நடந்து கொள்ளவும். சமயம் அறிந்து பேசுவதை பழகிக் கொள்ளவும்.
முடிந்த வரை எதிலும் பதற்றப்படாமல் நிதானமாக செயலாற்ற பழகிக் கொள்ளவும். குழந்தைகளை வளர்ப்பதில் அக்கறையை கூட்டிக் கொள்ளவும். அவர்களால் சில வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
விவசாயிகளுக்கு குத்தகைக்கு ஏமாற்றம் இழப்பு உண்டாகும். எனவே கவனம் தேவை. அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கட்டளைகளை, நிபந்தனைகளை மீறி செயல்பட கூடாது. மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் சற்று முன்னேற்றம் ஏற்படும் காலம் இது.

கடகம்

தடைகள் விலகும். யோக பாக்கியங்கள் அதிகரிக்கும். தாங்கள் எதிர்பார்த்ததை விட வருமானம் குறைவாக இருந்தாலும் முடிந்தவரை சிக்கனமாக இருந்து பழைய கடன்களைத் தீர்க்க திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள்.
பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் விலகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் ஏற்படும். மேலும் பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
நண்பர்கள் உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. உடன்பிறந்தோர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும்.
ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிரிகளால் தொல்லை அடைவர் . தற்போது புதிய கிளைகளை தொடங்கும் எண்ணத்தை சற்று தள்ளிவைப்பது நன்று.
முடிந்தவரை ஈரப்பதமான உணவுகளை தவிர்க்கவும். தொழிலில் அவசியமின்றி செல்லும் பயணத்தை தவிர்ப்பது நன்று.
முடிந்தவரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நன்று. பயணங்களின்போது கை பொருளின் மீது கவனம் தேவை. உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும்.
நோய் பாதித்தவர்கள் மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ளவும். புதிய ஒப்பந்தங்கள் போடும்போது ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படவும்.
அரசியல்வாதிகள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். விவசாயிகள் நல்ல மகசூலைப் பெறுவார்கள். மாணவ-மாணவிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். மேலும் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெறுவார்கள்.

சிம்மம்

தங்கள் தனித்திறமை வெளிப்படும் காலம் இது. அனைத்து செயல்களிலும் தனி முத்திரை பதித்து மிளிர்வீர்கள்.
நண்பர்களுக்காக வாக்கு கொடுப்பது, ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் லாபம் தென்படும் காலமிது. எனினும் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஒரு சில காரியங்களை நிறைவேற்ற மிகுந்த அலைச்சல் ஏற்பட்டு பின்பு வெற்றியில் முடியும்.


இருப்பினும் மாணவர்களுடன் செயல்களை செய்து முடிப்பீர்கள். விரயங்கள் உண்டு என்றாலும் அதற்கேற்ப வருவாய் உண்டு. வியாபாரிகளுக்கு வியாபாரம் சம்பந்தப்பட்ட அலைச்சலும் டென்ஷனும் நீங்கும். புதிய கிளைகளை தொடங்கும் எண்ணத்தை தற்போதைக்கு சற்று ஒத்தி வைக்கவும்.
கூட்டுத் தொழிலில் ஈடுபட்டு இருப்போர் அதிக கவனத்துடன் வார்த்தைகளிலும் கோப்புகளில் கவனம் தேவை.
விவசாயிகள் புதிய குத்தகைகளை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும் மகசூல் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிகளுக்கு முன்பு தலைமையிடம் கலந்து ஆலோசித்து செய்வது நன்று. இருப்பினும் தலைமையால் அடிக்கடி பாராட்ட பெறுவீர்கள்.
பெண்மணிகள் குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனதில் பட்டதை பேசுவதை தவிர்க்கவும்.
சேமிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. ஓய்வு நேரங்களில் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள புத்தகங்களை வாசிப்பது நன்று. மாணவர்கள் நினைத்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். இருப்பினும் உடல்நலத்தில் கவனம் தேவை.

கன்னி

தங்களின் அனைத்து செயல்களிலும் நிதானம் தேவை. அதேபோல் முன்னெச்சரிக்கையும் வேண்டும். எவரையும் எடுத்தெறிந்து பேசுவதை தவிர்க்கவும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி இருந்தாலும் செலவுகள் செய்யும் நேரத்தில் கவனமுடன் இருக்கவும். நீண்ட நாள்களாக நடைபெறாது என்று நினைத்திருந்த விஷயங்கள் நடைபெற்று தங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். வழக்குகள் இழுபறியாகவே இருக்கும்.


உடல்நலத்தில் அதிக அக்கறை தேவை. பொருளாதார நிலைமை சீராக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப் பளுவும் அதிகரிக்கும். இருப்பினும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். அலுவலகப் பணிகளை கவனத்துடன் கையாள்வது நன்று.
சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் உண்டாகும். வியாபாரிகள் சிறிய தடைகளுக்குப் பிறகு லாபத்தைக் காண்பீர்கள். புதிய கடன்களை வாங்க நேரிடலாம். எனவே கவனம் தேவை. விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். நீண்டநாள் எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் பெருமையாக பேசிய மற்றவரை கவர்வீர்கள். கட்சி மேலிடத்தின் நற்பெயருக்கு ஆளாவீர்கள்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை செய்து முடித்தாலும் பணவரவில் சற்று தடை தாமதம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் விளையாட்டுப் போக்கை கைவிடுவது நன்று. அவசியமின்றி பயணம் செய்வதை தவிர்க்கவும். பயணத்தில் கைப்பொருள் கவனம் தேவை.

துலாம்

லாம் சுபகாரியங்கள் நடத்துவதில் இதுவரை இருந்துவந்த தடை தாமதங்கள் நீங்கும். அனைவரின் ஒத்துழைப்பால் தாங்கள் தங்கள் குடும்ப சுபகாரியங்களை தடபுடலாக நடத்தி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும் வியாபாரத்தில் தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்க்கவும். வார்த்தைகளில் கவனம் வேண்டும். சிலருக்கு ஊர்மாற்றம் இடமாற்றம் ஏற்படும். கலைத்துறையினர் புதிய உத்திகளை கையாண்டு தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். தாங்கள் மேன்மையை அடைவதற்கான புதிய வாய்ப்புகள் தானாக வந்து சேரும் காலகட்டமிது.

மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். விவசாயிகள் உழைப்புக்கேற்ற லாபத்தை பெறுவார்கள். அரசு ஆதாயம் வந்து சேரும் காலமிது. அயல்நாடு செல்லும் கனவு பலிதமாகும். அரசியல்வாதிகள் தங்கள் பொறுப்புகளை சிறப்பாக செய்து முடித்து மேலிடத்து பாராட்டை பெறுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை படிப்படியாக சீராகி வரும் வீடு மாற்றம் செய்ய விரும்புவர்கள். அதை தற்போது நிறைவேற்றிக் கொள்ளலாம். புத்தாடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். கூட்டு தொழிலில் சற்று லாபம் அதிகரிக்கும் காலம் இது. முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்க்க பார்க்கவும்.

விருச்சிகம்

பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்த தியானம், யோகா பிராணயாமம் போன்றவற்றில் ஈடுபடலாம். குடும்பத்தினர் ஆதரவு கரம் நீட்டுவார்கள். மனதில் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு வேலையில் சிரமங்கள் ஏற்படும். இருப்பினும் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால் சில நன்மைகள் உண்டாகும்.
வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விற்பனை முறையை கையாளவும். மேலும் புதிய கிளைகளை தொடங்க தற்போது ஏதுவான நேரம் இருப்பினும் அனுபவமில்லாத தொழிலில் ஈடுபடும்போது கவனம் தேவை.


இத்தனைநாள் மற்றவர்களை சார்ந்து செய்து வந்த செயல்களை நீங்கள் தனித்து செய்யத் தொடங்குவீர்கள்.
சிலர் பழைய வீட்டை தங்கள் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். சிலர் பழைய வாகனத்தை விற்று புதிய வாகனத்தை வாங்குவீர்கள்.
சில அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள் விவசாயிகள் அதிக மகசூல் பெறுவதில் சிரமங்கள் இருக்கும், இருப்பினும் கால்நடைகள் மூலம் வருமானம் கிடைக்கும். வரும் வருமானம் செலவுகளை ஈடு செய்ய உதவும். அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். மேலும் அரசு அதிகாரிகளின் ஆதரவும் உண்டாகும். மாணவ-மாணவிகள் கல்விக்கான பயிற்சிகளில் அக்கறை காட்டவும். முடிந்தவரை விளையாட்டில் கவனம் செலுத்துவதை தவிர்க்கவும். கலைத்துறையினர் பிரமுகர்களின் அறிமுகத்தால் புதிய ஆர்டர்களை பெறுவீர்கள்.

தனுசு

குடும்பத்தில் தங்களுக்கென தனி மதிப்பு கூடும். கடன்களைத் தீர்க்க திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம். எனவே உணவு விஷயங்களில் கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் நண்பர்களால் ஆதாயம் இல்லை, எனிலும் அவர்களது ஆலோசனைகள் சில நேரங்களில் பயன்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்சனைகள் இன்றி செயல்பட்டு சான்று பெறும் காலம் இது. முடிந்தவரை மேலதிகாரிகளிடம் அனுகூலமாக நடந்து கொள்வது சிறப்பு. அவர்களுக்கு வியாபாரத்தில் சுமாரான லாபமே கிடைக்கும். இருப்பினும் புதிய வாடிக்கையாளர்களை தேடும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும்.


உபரி வருவாயை பெருக்கி வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. சிலர் புதிய வாகனங்களை வாங்குவார்கள். கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் பங்குதாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை குறைத்துக்கொள்ளவும். முடிந்தவரை வாக்கு தருவதை தவிர்க்கவும். ஜாமீன் நிற்பது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவது இதுபோன்ற செயல்களில் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஈடுபடவும்.
பிரிந்து போன உறவினர்கள் வீடு தேடி வருவர் உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அரசியல்வாதிகள் அரசிடம் இருந்து சில சலுகைகளை பெறுவார்கள். கலைத்துறையினருக்கு புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும் காலம் இது. மாணவ மாணவிகள் கல்வியில் அக்கறை செலுத்தவும். மேலும் விளையாடும் போது கவனமாக இருக்கவும்.

மகரம்

சற்று நிம்மதி போனதுபோல் இருப்பீர்கள். இருப்பினும் புதிய நட்பு வட்டாரத்தில் சற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி படிப்படியான முன்னேற்றம் காண்பீர்கள். உயர்ந்த விலை நட்பினால் வேலைகள் சுமூகமாக முடியும். உத்தியோகஸ்தர்கள் இதுநாள்வரை தடைப்பட்ட அனைத்து காரியங்களும் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கோப்புகளை கையாளும்போதும் கவனமாக செயல்படவும். கடன் வசூலில் கடுமை காட்டக் கூடாது. முடிந்தவரை நயமாகப் பேசி வசூலிக்கப் பார்க்கவும். தாய்மாமன் உறவுகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பார்த்திருந்த சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும்.


உறவினர் வருகையால் உள்ளம் மகிழும். குழந்தைகள் வளர்ச்சியில் அக்கறை ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை கூடும்.
பொது வாழ்வில் பெயரும் புகழும் கூடும். உடல் நலத்தில் அக்கறை காட்டவும் விவசாயிகளின் உடல் உழைப்புக்கு ஏற்ப லாபம் பெருகும். அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் தேடிவரும். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபார வளர்ச்சிக்கு பல புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மேலும் கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் வீடு தேடி வரும்.
மாணவ-மாணவிகள் விளையாட்டுப் போக்கில் கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவும்.

கும்பம்

நினைத்த காரியங்கள் தாமதமாக நிறைவேறும். பொருளாதாரம் சற்று ஏற்ற இறக்கமாக காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
நெருங்கியவர்கள் உடன் எச்சரிக்கையுடன் பழகவும். அனாவசிய செலவுகளைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகவும். அவர்களுக்கு வியாபாரம் சுமாராக இருக்கும்.


புதிய கிளைகளைத் துவங்கும் எண்ணம் ஏற்படும். விவசாயிகளுக்கு கொள்முதல் மந்தமாகவே இருக்கும். கால்நடைகளுக்கான பராமரிப்பு செலவு கூடும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படும். இருப்பினும் ஊதிய உயர்வு உண்டு. போட்டி பொறாமைகள் குறையும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள பாடுபடுவீர்கள். அனைத்து செயல்களிலும் இழுபறி ஏற்பட்டு பின்பு சீராகும். அரசியல்வாதிகளுக்கு பொது வாழ்வில் பெயரும் புகழும் அதிகரிக்கும்.
கூட்டுத் தொழிலில் ஈடுபடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். அதேபோல் ஏற்கனவே கூட்டுத் தொழிலில் பணிபுரிபவர்கள் பங்குதாரர்களுடன் கருத்து மோதல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.
ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். ஜீவசமாதிகள் சித்தர் சமாதிகள் சென்று தரிசிக்கும் பாக்கியம் ஏற்படும்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். தம்பதி இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை கூடும். மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண்கள் குறையும். இருப்பினும் முயற்சியைக் கைவிடாமல் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,

மீனம்

நீண்டகால எண்ணங்கள் ஈடேறும். திட்டமிட்ட பணிகளில் தொய்வுகள் இருப்பினும் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். உறவினரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் காலம். உத்தியோகஸ்தர்கள் இடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்து கொள்வார்கள்.
நீண்டநாள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு சுமாரான லாபமே கிடைக்கும். இருப்பினும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவீர்கள். முடிந்தவரை கூட்டு தொழில் செய்யாமல் தனித்தே ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் வருமானம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் வேண்டிய பொருள்கள் கிடைத்துவிடும். எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள் அலுவலகப் பணிகளில் சுமுகம் இருக்கும்.
சிலர் பூர்வீக இடங்களுக்கு சென்று குடியமர முடிவு செய்வீர்கள். நீண்ட நாள்களாக நினைத்திருந்த வீடு மனை வாங்கும் திட்டத்தை செயல்படுத்துவீர்கள். தேவையற்ற நட்புகளை விட்டு விலகுவது தங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை தரும். உறவினர்களிடம் குடும்பத்தாரிடம் கருத்து மோதல் ஏற்படுமாறு பேசுவதை தவிர்க்கவும்.
விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலைக் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு எதிரிகள் தொல்லை நீங்கும். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மாணவ மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் பெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று ஜெயிப்பார்கள்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.