அனைத்துலக அருங்காட்சியக நாள்

இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் (இலங்கைத் தமிழர்).

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள். இது இலங்கைத் தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டுதோறும் மே 18-ஆம் நாள் நினைவு கூரப்படுகிறது. 2009-ஆம் ஆண்டில் இந்நாளில் இலங்கையின் வடகிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் என்னும் கிராமத்தில் ஈழப்போர் முடிவுற்றது.

பிற நிகழ்வுகள்-

1565 – ஓட்டோமான் படைகள் மால்ட்டாவை அடைந்தன. மால்ட்டாவின் ஆக்கிரமிப்பு தொடங்கியது.
1652 – வட அமெரிக்காவிலேயே முதன்முதலில் அடிமைத் தொழிலை ஒழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொண்டு வந்தது.
1765 – கனடாவின் மான்ட்ரியால் நகரத்தின் பெரும்பகுதி தீயினால் அழிந்தது.
1803 – ஐக்கிய இராச்சியம் பிரான்ஸ் மீது போரை அறிவித்தது.
1804 – முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக செனட் தேர்வு செய்தது.
1869 – ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது.
1896 – ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கோலசின் முடிசூடும் நிகழ்வின்போது “கோடின்கா” என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் உயிரிழந்தனர்.
1897 – ஐரிய எழுத்தாளர் பிராம் ஸ்டோக்கர் எழுதிய டிராக்குலா புதினம் வெளியிடப்பட்டது.
1910 – ஹேலியின் வால்வெள்ளியின் வழியாக பூமி சென்றது.
1927 – மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வில் பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45 பேர் கொல்லப்பட்டனர்.
1969 – அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1974 – சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்தது.
1980 – வாஷிங்டனில் சென் ஹெலன்ஸ் மலை தீக்கிரையானதில் 57 பேர் கொல்லப்பட்டனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சேதம் ஏற்பட்டது.
1984 – அன்னலிங்கம் பகீரதன் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.
1991 – ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.
2006 – நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.
2009 – ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.