மே 31 வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு
சென்னை: இம்மாதம் 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட உத்தரவில். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கீழ்க்கண்ட தடைகள் மற்றும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை நீடிக்க தடை விதிக்கப்படுகிறது.
பள்ளிகள், கல்லூரிகள் மறுஉத்தரவு வரும் வரை இயங்குவதற்கு தடை தொடர்கிறது. அதேபோல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்யவும் தடை நீடிக்கிறது.
ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கான இ-பாஸ் நடைமுறை தொடரும்.
தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் செயல்படுவதற்கான தடை தொடரும். திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போதுள்ள நடைமுறையே வரும் 31-ம் தேதி வரை தொடரும்.
12 மாவட்டங்களுக்கு தளர்வு இல்லை
மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் ஆகியவற்றுக்கு தடை தொடரும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான ஊரடங்கில் எந்த தளர்வும் இல்லை.
25 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகள்
கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, அந்தந்த மாவட்டத்துக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் தமிழக அரசின் இ-பாஸ் இல்லாமல் இயங்க தளர்வு அளிக்கப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவர அரசின் இ-பாஸ் பெற்றுச் செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.
தனியார், அரசு பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேரும், வேன்களில் 7 பேரும் பயணிக்கலாம். வாடகை கார்களை அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.
You must log in to post a comment.