உ.பி.யில் விபத்து: தொழிலாளர்கள் 24 பேர் பலி
லக்னோ: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ராஜஸ்தானில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு லாரி மூலம் சென்றபோது கண்டெய்னர் லாரி மோதியதில் 24 பேர் உயிரிழந்தனர்.
ஊரடங்கில் சிக்கித் தவிக்கும் ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர். காலதாமதம், உரிய அனுமதி அட்டை இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் அவர்களில் பலர் லாரிகளில் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பிகார், ஜார்கண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு லாரி மூலம் தொழிலாளர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
அவுரையா என்ற பகுதி அருகே மற்றொரு லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் நடந்துள்ளது.
கடந்த இரு வாரங்களில் மட்டும் 6-க்கும் மேற்பட்ட விபத்துகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
You must log in to post a comment.