மலேசிய ஆசிரியர் தினம்

மலேசிய ஆசிரியர்களுக்கு சுதேசமித்திரனின் வாழ்த்து

மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்தப்படடவற்றுள் தாயுக்கும், தந்தைக்கும் அடுத்து குருவானவரே முதன்மையானவராகிறார். அத்தகைய குருவாக விளங்கும் இன்றைய ஆசிரியர்கள்தான் நாளை எதிர்காலம் எப்படி அமையவேண்டும் என்பதை நிர்ணயிப்பவர்கள்.

அத்தகைய புனிதப் பணியை நேர்மையோடும், ஆத்மாத்தமாகவும், என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வாக்கியத்துக்கு ஏற்ப செயல்பாட்டால் மாணவர்களின் இதய சிம்மாசனங்களில் வீற்றிருக்கும் மலேசிய ஆசிரியர்களுக்கு சுதேசமித்திரன் வணங்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

பிற நிகழ்வுகள்…

1667 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.
1811 – கூட்டுப் படைகள் (ஸ்பெயின், போர்த்துக்கல், மற்றும் பிரித்தானியா) பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன.
1916 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.
1920 – ரோமில் ஜோன் ஒஃப் ஆர்க் திருத்தந்தை 15-ஆம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார்.
1932 – மும்பையில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1960 – கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுக் கூடத்தில் தியொடர் மாய்மன் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கிக் காட்டினார்.
1966 – சீனாவின் கலாசாரப் புரட்சியின் தொடக்கத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
1967 – ஜெருசலேம் இஸ்ரேலின் வசம் வந்தது.
1969 – சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது.
1975 – பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
1975 – ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.
1992 – எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.
2004 – 30-களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.
2006 – தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
2006 – நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.