தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 66-ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 9,674-ஆக உள்ளது.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 194 பெண்களும் அடங்குவர். சென்னையில் மட்டும் இன்று நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்கள் 363 பேர். அதேபோல் இன்று மட்டும் 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் நலமடைந்தோர் எண்ணிக்கை 2,240 ஆக உயர்ந்துள்ளது.
பலி எண்ணிக்கை 66-ஆக உள்ளது. தற்போது 7,365 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர் என்றார்

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.