ஜூன் இறுதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து
புதுதில்லி: ஜூன் இறுதி வரை பயணிகள் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் இருந்து நாட்டின் 15 நகரங்களுக்கு முதல்கட்டமாக சிறப்பு ரயில்கள் இயத்தப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே செய்யப்பட்டது. இதில் பயணம் செய்வோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணத்தையும் ரயில்வே நிர்வாகம் முழுமையாக திரும்ப செலுத்திவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து செல்லும் சிறப்பு ரயிகள் மட்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
You must log in to post a comment.