கொரோனா இல்லாத மாவட்டங்கள் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

சென்னை : கொரோனா நோய்த் தொற்று இல்லாத பச்சை மண்டலங்களாக கோவை, நாமக்கல் மாவட்டங்கள் மாறியுள்ளன.
கோவையில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் படிப்படியாக குணமடைந்து வீடு திரும்பினர். இறுதியாக இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி ஒருவரும் நோய்த் தொற்று குணமாகி புதன்கிழமை வீடு திரும்பினார்.
அதைத் தொடர்ந்து கோவை கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று சிகிச்சை பெற்று வந்த 15 பேரும் குணமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த மாவட்டமும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஈரோடு, சிவகங்கை, திருப்பூர் , கோவை, நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.