தமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு


சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை மேலும் 509 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டியது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 716 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,718-ஆக இருந்தது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 380 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா உறுதி பாதித்தோர் எண்ணிக்கை 5,262-ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பின் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.