முலாயம்சிங் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

லக்னோ: சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் யாதவ் ஞாயிற்றுக்கிழமை இரவு லக்னோவில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முலாயம் சிங்கின் சகோதரரும், பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சியின் (லோஹியா) தலைவருமான சிவ்பால் சிங் யாதவ் தனது டுவிட்டரில், கடவுளின் கிருபையால் அவர் ஆரோக்கியமாக உள்ளார். கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் அவர் நீண்ட காலம் வாழ்வார் என பதிவிட்டுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.