முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
புதுதில்லி:முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சுவலி காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
87 வயதான மன்மோகன் சிங், இதயத்துறை பேராசிரியர் டாக்டர் நிதிஷ் நாயக் கண்காணிப்பில் உள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங், தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
மன்மோகன் சிங் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
You must log in to post a comment.