இந்திய தொழில்நுட்ப நாள்

-கண்ணன்சேகர்

📌ஆண்டுதோறும் மே 11-ஆம் நாள் இந்திய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுகிறது.

📌உலகின் முதல் இதய மாற்று சிகிச்சை 
இன்றைய தினத்தில் நடைப்பெற்றது.

இதய மாற்று அறுவை சிகிச்சை இதயச் செயலிழப்பின் கடைசி நிலையில் உள்ள ஒருவருக்கு அல்லது தீவிர குருதி ஊட்டக்குறை இதய நோய் உள்ளவருக்கு இன்னொரு மனிதனில் இருந்து பெறப்பட்ட ஆரோக்கியமான இதயத்தை மாற்றீடு செய்யும் சத்திர சிகிச்சையாகும்.

பிற நிகழ்வுகள்

1502 – கொலம்பஸ் தனது கடைசி கடற் பயணத்தை மேற்கிந்தியத் தீவுகளுக்கு தொடங்கிய நாள்.
1812 – லண்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் ஜோன் பெல்லிங்ஹம் என்பவனால் கொல்லப்பட்டார்.
1857 – இந்தியக் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் தில்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1867 – லக்சம்பேர்க் விடுதலை அடைந்தது.
1891 – ஜப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
1905 – ஆல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
1924 – மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரினால் தொடங்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் அலூசியன் தீவுகளின் அட்டு தீவைக் கைப்பற்றினர்.
1949 – சியாம் நாடு தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1949 – ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேல் இணைந்தது.
1953 – டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர்.
1960 – முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.
1985 – இங்கிலாந்தில் உதைப்பந்தாட்ட போட்டியொன்றில் அரங்கில் இடம்பெற்ற தீயினால் 56 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.
1997 – ஐபிஎம்-இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.
1998 – இந்தியா பொக்ரானில் மூன்று அணுச் சோதனைகளை நடத்தியது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.