போலந்து-அன்னையர் தினம்

ஆஸ்திரேலியா – தேசிய மன்னிப்பு நாள்
போலந்து – அன்னையர் தினம்
ஜார்ஜியா – தேசிய நாள்

தமிழ் திரைப்பட நடிகை மனோரமா (1937) பிறந்த நாள்

பிற நிகழ்வுகள்

1293 – ஜப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
1538 – ஜோன் கால்வின் மற்றும் அவரது சீடர்கள் ஜெனீவா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
1637 – பீக்குவாட் போரில் புரொட்டஸ்தாந்து, மொஹீகன் படைகள் ஜெர்மன் தளபதி ஜான் மேசன் தலைமையில் ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட்டில் பீக்குவாட் இனத்தவர்களின் ஊர் ஒன்றைத் தாக்கி 500-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் பழங்குடியினரைக் கொன்றனர்.
1838 – ஐக்கிய அமெரிக்காவில் செரோக்கீ பழங்குடிகளின் கட்டாய குடி அகல்வின்போது 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
1879 – ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் ரஷ்யாவும் ஐக்கிய ராச்சியமும் கையெழுத்திட்டன.
1896 – ரஷ்யாவின் இரண்டாம் நிக்கோலஸ் ரஷ்யாவின் சார் மன்னனாக முடி சூடினார்.
1912 – இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக் கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
1918 – ஜார்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.
1958 – இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியபோது, தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர்.
1966 – பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1969 – அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்துக்குத் தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமிக்கு திரும்பியது.
1983 – ஜப்பானைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் 104 பேர் கொல்லப்பட்டனர்.
1991 – தாய்லாந்தின் விமானம் ஒன்று வெடித்ததில் 223 பேர் பலியாகினர்.
2002 – மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை கண்டறிந்தது.
2006 – ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் உயிரிழந்தனர். 2 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.