புகையிலை எதிர்ப்பு நாள்

சிறப்பு நாள்
புகையிலை எதிர்ப்பு நாள்


பிற நிகழ்வுகள்


1223 – செங்கிஷ்கான் மங்கோலியப் படையினர் கிப் சாக்யரை போரில் தோற்கடித்தன.
1889 – பென்சில்வேனியா ஜோன்ஸ் டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்த விபத்தில் 2,200 பேர் உயிரிழந்தனர்.
1900 – பிரித்தானியப்படைகள் ரொபேர்ட் பிரபு தலைமையில் ஜோகர்னஸ்பேக் நகரைக் கைப்பற்றின.
1902 – தென்னாப்பிரிக்காவில் இரண்டாவது போவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.
1910 – தென்னாப்பிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது.
1911 – டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1921 – ஐக்கிய அமெரிக்காவில் ஒக்லஹோமா, துல்சா என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது 39 பேர் கொலையுண்டனர்.
1931 – பாகிஸ்தானின் குவெட்டா என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 40,000 பேர் பலியாகினர்.
1942 – இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் சிட்னி நகரைத் தாக்கின.
1961 –தென்னாப்பிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது.
1962 – மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
1970 – பெருவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 47 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
1973 – சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அடைந்தபோது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் பலியாகினர்.
1997 – கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் (Confederation Bridge) திறக்கப்பட்டது.
1981 – யாழ்ப்பாணம் பொது நூலகம் நள்ளிரவில் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது.
2004 – வீரகேசரி பத்திரிகை நிருபரும் பத்திரிகையாளருமான ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2005 – இலங்கையின் புலனாய்வுத் துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2007 – டொராண்டோ தமிழியல் மாநாடு தொடங்கியது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.