இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த நாள்

இன்று

இசையமைப்பாளர் ளையராஜா பிறந்த நாள், திரைப்பட இயக்குநர் மணிரத்னம் பிறந்த நாள்

பிற நிகழ்வுகள்

1615 – பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பிரசாரகர்களின் முதல் தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர்.
1896 – மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1924 – ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த அனைத்து பழங்குடிகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்ட மூலத்தை அதிபர் கால்வின் கூலிட்ஜ் அறிமுகப்படுத்தினார்.
1943 – இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த நாள்.
1946 – இத்தாலியில் முடியாட்சியை குடியரசாக மாற்றும் முடிவுக்கு மக்கள் ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலி மன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.
1953 – இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டு விழா முதற்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
1956 – இயக்குநர் மணிரத்னம் பிறந்த நாள்.
1965 – வியட்நாம் போரில் முதலாவது தொகுதி ஆஸ்திரேலியத் துருப்புகள் தெற்கு வியட்நாமை அடைந்தன.
1966 – நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவே.
1999 – பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்பட்டது.
2003 – செவ்வாய் கோளுக்கான மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனது முதலாவது விண்கலத்தை ஐரோப்பிய ஆய்வு மையம் ஈசா கஜக்ஸ்தானில் இருந்து ஏவியது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.