வரலாற்றில் இன்று


421 – கிழக்கு உரோமின் பேரரசர் இரண்டாம் தியோடோசியசுவின் திருமணம் கான்ஸ்டண்டினோபில்லில் கொண்டாடப்பட்டது.
879 – திருத்தந்தை எட்டாம் யோன் குரோவாசியாவை தனிநாடாக அங்கீகரித்தார்.
1002 – இரண்டாம் ஹென்றி ஜெர்மானியப் பேரரசராக முடி சூடினார்.
1099 – முதலாவது சிலுவைப் போர்: ஜெருசலேம் மீதான முற்றுகை ஆரம்பமானது.
1654 – பதினான்காம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
1692 – யமேக்காவில் மூன்று நிமிடங்கள் நீடித்த நிலநடுக்கத்தில் 1600 பேர் உயிரிழந்தனர், 3,000 பேர் வரை காயமடைந்தனர்.
1832 – கனடாவில் கியூபெக்கில் அயர்லாந்துக் குடியேற்றம் செய்தவர்களால் வந்த ஆசிய வாந்திபேதி நோய் காரணமாக 6,000 பேர் உயிரிழந்தனர்.
1862 – அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஆப்பிரிக்க அடிமை வணிகத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன.
1863 – மெக்சிக்கோ நகரம் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
1905 – நார்வேயின் நாடாளுமன்றம் சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது.
1917 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில் மெசைன் என்ற இடத்தில் 10,000 ஜெர்மானியப் படையினர் கொல்லப்பட்டனர்.
1919 – மால்ட்டா தலைநகர் வல்லெட்டாவில் தேசியவாதிகளின் கலகம் வெடித்தது. பிரித்தானியப் படையினர் சுட்டதில் நால்வர் கொல்லப்பட்டனர்.
1929 – வத்திக்கான் நகரை தனிநாடாக அங்கீகரிக்கும் உடன்பாடு இத்தானிய இராச்சியத்துக்கும் திரு ஆட்சிப்பீடத்திற்கும் இடையில் ஏற்பட்டது.
1938 – இரண்டாம் சீன-ஜப்பானியப் போர்: சீனத் தேசியவாதிகளின் அரசு ஜப்பானிய ராணுவத்தின் முற்றுகையைத் தடுக்கும் முகமாக மஞ்சள் ஆற்றைப் பெருக்கெடுக்கச் செய்தது. 500,000 முதல் 900,000 வரை உயிரிழந்தனர்.
1940 – ஏழாம் ஆக்கோன் மன்னரும், முடிக்குரிய இளவரசர் ஒலாவும் நார்வே அரசும் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் நாடு கடந்த நிலையில் இயங்கினர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நாடு திரும்பினர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: அலாஸ்காவுக்கு அப்பாலுள்ள அலூசியன் தீவுகளில் உள்ள அட்டு, கிசுக்கா ஆகிய அமெரிக்கத் தீவுகளை ஜப்பானியப் படைகள் கைப்பற்றின.
1944 – இரண்டாம் உலகப் போர்: 350 கிரீட்டிய யூதர்களையும் 250 கிரீட்டிய சார்பாளர்களையும் ஏற்றிச் சென்ற கப்பல் கிரேக்கத்தின் சந்தோரினி தீவுக்கு அருகில் மூழ்கியதில் கப்பலில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
1946 – இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிபிசி தொலைக்காட்சி சேவை ஏழு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.
1948 – செக்கோசிலோவாக்கியாவின் அரசுத்தலைவர் எட்வர்டு பெனெசு தனது நாட்டை கம்யூனிச நாடாக மாற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்து பதவியில் இருந்து விலகினார்.
1962 – அல்ஜியர்ஸ் பல்கலைக்கழக நூலகக் கட்டடம் வலதுசாரித் தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்டதில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் எரிந்தன.
1977 – ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வெள்ளி விழா நிகழ்வுகளை 500 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தனர்.
1981 – இஸ்ரேலிய வான்படை ஈராக்கிய ஒசிராக் அணுக்கரு உலையை ஒப்பேரா நடவடிக்கையின் போது குண்டுவீசி அழித்தது.
1989 – சுரினாமில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 187 பேரில் 176 பேர் உயிரிழந்தனர்.
1991 – பிலிப்பைன்சில் பினட்டூபோ எரிமலை வெடித்து 7 கிமீ உயரத்துக்கு அதன் தூசிகள் பறந்தன.
2000 – இஸ்ரேல், லெபனான் ஆகியவற்றிற்கிடையேயான எல்லைக் கோட்டை ஐக்கிய நாடுகள் அவை வரையறுத்தது.
2000 – கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அமைச்சர் சி. வி. குணரத்ன மற்றும் தெகிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
2006 – மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் இடம்பெற்ற கண்ணிவெடியில் சிக்கி 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – ஈழப்போர்: கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
2013 – சீனாவின் சியாமென் நகரில் பேருந்து ஒன்று தீப்பற்றியதில் 47 பேர் உயிரிழந்தனர்.
2014 – காங்கோ மக்களாட்சிக் குடியரசில், தெற்கு கீவு மாகாணத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 37 பேர் கொல்லப்பட்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.