தேநீர் விற்று அன்னதானம் செய்யும் இளைஞர்

மதுரை: மதுரை மாவட்டம்,  அலங்காநல்லூரில் தேநீர் விற்பனை செய்யும் பட்டதாரி இளைஞர் ஊரடங்குகாரணமாக பாதிக்கப்பட்டுள்ள ற ஏழைகளுக்கு உதவி வருகிறார்.

அலங்காநல்லூரில் தேநீர் விற்பனை செய்யும் பட்டதாரி இளைஞர் ஒருவர் தினசரி காலை, மாலை,  இரவு ஆகிய மூன்று வேளையிலும் ஏழை மக்களுக்கு உணவும், தண்ணீர் பாட்டில்களும் வழங்கி வருகிறார்.

தான் தினசரி சம்பாதிக்கும் பணத்தில் இந்த பணியை திறம்பட செய்து வருவதாக கிராம மக்கள் பலர் தெரிவித்தனர்.  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (23).  பிஎஸ்சி பட்டதாரியான இவர் தனது இரண்டு வயதிலே தாய் மற்றும் தந்தையை இழந்து சிலருடைய உதவியால் விருதுநகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்துள்ளார்.

பின்னர் தேநீர் விற்பனை செய்யும் எண்ணம் உருவாகி கடந்த சில மாதங்களாக அலங்காநல்லூர் கேட்டு கடை காந்திகிராமம் ஆகிய பகுதிகளில் சைக்கிளில் நாள்தோறும் சென்று தேநீர் விற்பனை செய்கிறார். அதில் கிடைக்கும் தொகையில் தலா 10 பேருக்கு காலை, நண்பகல், இரவு ஆகிய நேரங்களில் உணவுப் பொட்டங்களும், தண்ணீர் பாட்டில்களும் வழங்கி வருகிறார்.

இதுகுறித்து தமிழ் அரசனிடம் கேட்டபோது,  நான் ஆதரவற்ற நிலையில் வளர்ந்ததால் என்னை போல யாரும் உணவின்றி சிரமப்படக் கூடாது என்ற எண்ணத்தில் தேநீர் வியாபாரம் மூலம் எனக்கு கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை அன்னதானத்துக்காக செலவிட்டு வருகிறேன். எதிர்காலத்தில் ஆதரவற்றோர் விடுதிகள் ஏழை மக்களுக்கு உதவுவதை என் லட்சியமாக கொண்டுள்ளேன் என்றார் அவர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.