புதிய சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழக சுகாதாரத் துறை செயலராக இருந்து வந்த பீலா ராஜேஷ் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஜெ.ராதாகிருஷ்ணன் அப்பொறுப்புக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார்.
பீலா ராஜேஷ் தற்போது வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். தமிழக சுகாதாரத் துறை செயலர் பொறுப்புக்கு சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்த ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
You must log in to post a comment.