குடியாத்தத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

குடியாத்தம்: குடியாத்தம் நகரப் பகுதியில் அதிகரித்து வரும் கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையை அடுத்து மறுஉத்தரவு வரும் வரை ஒருசில முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்படுகின்றன என்று குடியாத்தம் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்

அதன்படி, பழைய பேருந்து நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடி மொத்த கொள்முதல் மற்றும் காய்கறிகள் மொத்த விற்பனை நடைபெறும்.  தரணம்பேட்டை பஜார் பகுதியில் இயங்கி வரும் அனைத்து சில்லறை காய்கறிகள் கடைகளும் கெங்கையம்மன் கோவில் அருகே உள்ள ஆற்று பகுதியில் செயல்படும்.

உழவர் சந்தை வழக்கம் போல் நகராட்சி பள்ளி மைதானத்தில் செயல்படும். காய்கறிகறிகள் மற்றும் மளிகை கடைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டும் செயல்படும். கடைகளில் உள்ள வியாபாரிகளும் கடைகளுக்கு வரும் பொதுமக்களும் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிய வேண்டும்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.