வெறிச்சோடிய ஜிஎஸ்டி சாலை

செங்கல்பட்டு, ஜுலை 2: சென்னையில் பொது முடக்கம் காரணமாக தாம்பரம்_வண்டலூர் ஜிஎஸ்டி சாலை  வாகனங்கள் எதுவும் செல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

தாம்பரம்-வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் நாள்தோறும் பல ஆயிரம் கார்கள்,  பேருந்துகள், வேன்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், தனியார் நிறுவனங்களின் வாகனங்கள் என பயணம் செய்வது வாடிக்கை. ஒரு சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடக்கும் இச்சாலையை தற்போது பொது முடக்கம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

சாலையைக் கடப்பதற்கு பல நிமிடங்கள் பாதசாரிகள் காத்திருக்கும் அளவுக்கு வாகனங்கள் வேகமாகச் சென்று மிரட்டல் விடுத்து வந்த சாலை இப்போது அமைதியாக காணப்படுகிறது.

பொதுமுடக்கம் மக்களுக்கு மட்டும் ஓய்வல்ல, இந்த சாலைக்கும்தான்!

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.