தமிழக அரசுக்கு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்  வரவேற்பு

வேலூர்: தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வுகளை எழுதுவதிலிருந்து விலக்களித்து அறிவித்துள்ள தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள அறிக்கை:

பருவத்தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக்குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது.  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாக நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையை தெரிவித்துள்ளது.  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு  பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக்கல்விக்குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின் படி மதிப்பெண்கள் வழங்கி இந்த பருவத்திற்கு மட்டும் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத்தேர்வுகளை எழுதுவதிலிருந்து விலக்களித்து அடுத்த கல்வி ஆண்டு செல்ல அனுமதிக்க தமிழக முதல்வர் உத்திரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் அறிவிப்பினை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் என்ற முறையிலும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் என்ற முறையிலும் வரவேற்கிறோம். 

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.