காற்று மாசு உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை

தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

புதுதில்லி: காற்று மாசு அதிகம் உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

காற்று மாசு  உயர்வு காரணமாக கொவைட்-19 பாதிப்பு அதிகரிக்கும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது. இச்சூழலில் காற்று மாசு அதிகம் உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பதாக அதிரடி அறிவிப்பை தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

காற்று மாசுள்ள மோசமான, மிகமிக மோசமான பிரிவுகளைச் சேர்ந்த நகரங்களில் திங்கள்கிழமை முதல் வரும் 30-ஆம் தேதி வரை இத்தடை அமல்படுத்தப்பட வேண்டும் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தடை விதிகளை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.