எந்தெந்த கடைகள் நாளை முதல் திறந்திருக்கலாம்?
அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் எந்தெந்த கடைகள் திறந்திருக்கலாம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் விவரம்:
- பூ, பழம், காய்கறி மற்றும் மளிகை, பெட்டிக் கடைகள்.
- டீக்கடைகள், பேக்கரிகள் உணவகங்கள் – பார்சல் மட்டும்.
- இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்.
- கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடைகள்.
- சிமென்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்பனை கடைகள்.
- ஊரக பகுதிகளில் குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள்.
- இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடைகள், வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை கடைகள், கணினி விற்பனை கடைகள்.
- மின் சாதன பழுது நீக்கும் கடைகள்.
- வீட்டு உபயோக இயந்திரங்கள், வீட்டு உபயோக பொருள்கள் விற்கும் கடைகள்.
- கண் கணணாடி மற்றும் பழுது பார்க்கும் கடைகள்.
- மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்.
- பெட்டிக் கடைகள், பர்னிச்சர் கடைகள்.
- ஜெராக்ஸ் கடைகள்.
- டிவி விற்பனை, பழுது நீக்கும் கடைகள்.
- சாலையோர தள்ளு வண்டி கடைகள்.
- உலர் சலவையகங்கள்.
- கூரியர், பார்சல் சர்வீஸ்.
- லாரி புக்கிங் ஆபிஸ்,
- செல்போன் விற்பனை, பழுது பார்க்கும் கடைகள்
சலூன் கடைகளுக்கு அனுமதி இல்லை
சலூன் கடைகள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.
சென்னையில் கடைகள் காலை 10.30 முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் காலை 10 முதல் இரவு 7 மணிவரை இயங்கலாம்.
You must log in to post a comment.