மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு

சென்னை, ஜூலை 1: மானியமில்லாத எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து 2-ஆவது மாதமாக உயர்ந்துள்ளது. எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.4 அதிகரித்து ரூ.610.50 ஆக உள்ளது.

வீடுகளுக்கு ஆண்டுக்கு 12 எரிவாயு சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை) மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதல் சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலைக்கே வாங்க வேண்டும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றும், அன்னிய செலவாணிக்கு இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் மானியம் அல்லாத வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.4 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் கடந்த மே மாதம் ரூ.606.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.610.50 ஆக தற்போது அதிகரித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.