ஏமாற்றமே மிஞ்சியது – நிதியமைச்சரின் அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கருத்து
புதுதில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை புதன்கிழமா மாலை சந்தித்தார். அப்போது அவர் பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் கூறியது: ஏழை மக்கள், பசியில் உள்ளவர்களுக்கு நிதி அமைச்சரின் அறிவிப்பில் எதுவும் இல்லை. அன்றாடம் கடுமையாக உழைப்பவர்களுக்கு மத்திய அரசின் அறிவிப்பு பெரிய அடியாக விழுந்துள்ளது.
மாநில அரசுகளும் அதிக கடன் வாங்க அனுமதிக்க வேண்டும். அதற்கும் மத்திய அரசு தயாராக இல்லை. மத்திய அரசு அதிக கடன் வாங்க வேண்டும். ஆனால், அதை செய்ய அவர்கள் தயாராக இல்லை.
சொந்த ஊர்களுக்கு நடந்து செல்பவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றார் ப.சிதம்பரம்
You must log in to post a comment.