இருளில் மூழ்கிய பாலம்: விபத்து ஏற்படும் ஆபத்து
மதுரை: மதுரை மாவட்டம், காளவாசல் சந்திப்பில் கன்னியாகுமரி வாரணாசி மேம்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. ஆனாலும் இப்பாலத்தில் போதிய அளவில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இருளில் மூழ்கிக் கிடக்கும் இப்பாலத்தை மாலை 7 மணியை எட்டியதும் பொதுமக்கள் இப்பாலத்தைக் கடக்க அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அல்லது சைக்கிளில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
You must log in to post a comment.