பெரும் சேதம் தவிர்க்கப்பட்ட தீ விபத்து
மதுரை: மதுரையில் தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கை காரணமாக பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது.
மதுரை மாவட்டம், பைபாஸ் துரைசாமி நகர் மூன்றாவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் திங்கள்கிழமை இரவு எலக்ட்ரிகல் மெயின் பாக்ஸ் பேனலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவத் தொடங்கிய நிலையில், வீட்டின் உரிமையாளர் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். முன்னதாக மின்வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அப்பகுதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. துரிதமாக தீயணைப்புத் துறையினர் செயல்பட்டதால் பெரும் தீ விபத்தாக மாறாமல் தவிர்க்கப்பட்டது.
You must log in to post a comment.