நூற்பாலையில் தீ
மதுரை: மதுரை அருகே விளாங்குடியில் தனியாருக்குச் சொந்தமான செல்வராஜ் டெக்ஸ்டைல்பிரைவேட் லிமிடெட் என்னும் நூற்பாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இந்த நூற்பாலை அருகே அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பெட்ரோல் பங்க் போன்றவை உள்ளதால் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நூற்பாலை கடந்த மூன்று மாத காலமாக மூடி கிடைப்பதாக கூறப்படுகிறது..ஆனால் இங்கு எப்படி தீப்பிடித்து என கூடல்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை தீயணைப்பு துறை மாவட்ட நிலைய அலுவலர் கல்யாணகுமார் மற்றும் மதுரை டவுன் நிலை அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான மதுரை தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
You must log in to post a comment.