தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஒருசில தளர்வுகளும் அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை 5-ஆவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை நாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை ஜூன் 30 வரை நீட்டிப்பதாக அறிவித்தது.

இந்நிலையில், தமிழக அரசு இதைப் பின்பற்றி ஜூன் 30 வரை தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இருப்பினும் கொரோனா நோய்த் தொற்று அச்சம் நீங்கிய பகுதிகளுக்கு ஒருசில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.


குறிப்பாக இத்தளர்வுகள் சென்னை மற்றும் நோய்த் தொற்று பரவல் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களுக்கே இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசின் அறிவிப்பின்படி, பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிக்கப்படுகிறது. ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்துக்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை. மண்டலத்துக்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை.
மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார், கூட்ட அரங்குகள் திறப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.


கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர இதரப் பகுதிகளில் முடித் திருத்தகங்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள், டீக்கடைகள் செயல்படலாம். பெரிய கடைகள் 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.


அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தக் கூடாது. ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே பயணம் செய்யலாம்.

ஜூன் 1 முதல் 7-ஆம் தேதி வரை காய்கறிக் கடைகள், உணவகங்கள் காலை 6 முதல் 8 மணி வரை இயங்கலாம். 8-ஆம் தேதி முதல் டீக்கடைகள், உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம்.


தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20 சதவீதப் பணியாளர்களுடன் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம். 50 சதவீத ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.


ஜூன் 30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்கள் திறக்க தடை தடை நீட்டிக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்கள் இணைய வழிக்கல்வியை நடத்தலாம்.
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை… திண்டுக்கல் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.