பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட நாள்

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு  உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனம். இது பொதுவாக FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு பாரிஸ் நகரில் 1924 ஜூலை 24-இல் அமைக்கப்பட்டது. தற்போது இதில் 158 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

சிறப்பு நாள்

வனுவாட்டு – சிறுவர் நாள்

பிற நிகழ்வுகள்

1505 – போர்த்துக்கீச நாடுகாண் பயணிகள் இந்தியாவுக்கு செல்லும் வழியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் கில்வா என்ற இடத்தைத் தாக்கி அதன் மன்னரை திறை செலுத்தாத காரணத்துக்காகக் கொன்றனர்.
1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவரது  ஒரு வயது மகன் ஜேம்ஸ் மன்னன் ஆனார். 1911 – பெருவில் மச்சு பிச்சு என்ற 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார்.
1915 – சிக்காகோவில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 845 பேர் உயிரிழந்தனர்.
1923 – கிரேக்கம், பல்கேரியா மற்றும் முதலாம் உலகப் போரில் பங்கேற்ற நாடுகள் சுவிட்சர்லாந்தில் கூடி புதிய துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

1924 – பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) பாரிசில் அமைக்கப்பட்டது.
1931 – பென்சில்வேனியாவில் முதியோர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, கனடிய விமானங்கள் ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகரில் குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடங்கின. நவம்பர் மாத இறுதி வரை இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

1953 –  தென்னிந்தியத் திரைப்பட நடிகை – ஸ்ரீவித்யா  பிறந்த நாள்
1969 – அப்பல்லோ 11 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
1974 – சைப்ரசில் துருக்கியரின் படையெடுப்பின் பின்னர் சைப்ரசின் ராணுவ அரசு கவிழ்க்கப்பட்டு, மக்களாட்சி அமைக்கப்பட்டது.
1977 – லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது.
1982 – ஜப்பானில், நாகசாகியில் பெரும் வெள்ளம், மற்றும் மண்சரிவால் 299 பேர் கொல்லப்பட்டனர்.
1991 – இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.
2001 – கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளிளால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.