வருவாய்த் துறை திட்டங்களுக்கு இ-சேவை மூலமே விண்ணப்பம்
மதுரை, ஜூலை 8: மதுரை மாவட்டத்தில் வருவாய்த் துறை திட்டங்களுக்கு இ-சேவை மூலமே பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் கேட்டுக் கொண்டார்.
இந்திரா காந்தி முதியோர் உதவித் திட்டம், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித் திட்டம், முதிர்கன்னி உதவித் திட்டம் உள்ளிட்ட வருவாய்த் துறையின் சார்பில் அளிக்கப்படும் திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்வோர், இனி வரும் காலங்களில் இ-சேவை மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், நேரடியாக மனுக்களை அளிக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
You must log in to post a comment.