மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய்:குடியிருப்போர் அவதி
செங்கல்பட்டு, ஜூன் 30: புதுப்பெருங்களத்தூரில் கழிவுநீர் கால்வாய் மூடப்பட்டதால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பெருங்களத்தூரில் உள்ள நடைப்பயிற்சி பூங்கா எதிரே காலிமனை ஒன்று உள்ளது. இதையடுத்து இருதளம் கொண்ட குடியிருப்புகள், காய்கறி கடை ஆகியன அமைந்துள்ளன. குடியிருப்பு அருகேயுள்ள கழிவுநீர் கால்வாய் பராமரிக்கப்படாமல் போனதை அடுத்து அப்பகுதியில் வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் செல்வதற்கு வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாவதோடு, சுகாதார சீர்கேடு காரணமாக குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. தற்போது கழிவுநீர் கால்வாய் தனியாரால் முற்றிலும் மண் நிரப்பி மூடப்பட்டுள்ளது.
கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட கால்வாய் மூடப்பட்டுள்ள நிலையில், தொடர்புடைய பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மூடப்பட்ட கால்வாயை சீரமைத்து கழிவுநீர் வெளியேற வழிகாண வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மித்ரனின் பணி புகார் தெரிவிப்பது மட்டுமல்ல… சுட்டிக் காட்டப்படும் குறைகளின் உண்மை தன்மை அறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்போது அதை பாராட்டுவதும் தான்.
You must log in to post a comment.