பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் பிறந்த நாள்

பாமக நிறுவனர் டாக்டர் ச. இராமதாஸ் பிறந்த நாள் இன்று (பிறப்பு 1939). எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு படித்த அவர் 1967-இல் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியத் தொடங்கினார். வன்னியர் சமுதாயத்தினரின் நலனுக்காக வன்னியர் சங்கம் என்ற அமைப்பை 1980-இல் உருவாக்கினார். அதைத்தொடர்ந்து 1990-இல் பாட்டாளி மக்கள் கட்சி உருவெடுத்தது. ராமதாஸை அவரது ஆதரவாளர்கள் அய்யா என அழைத்து வருகின்றனர்.

மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 34 ஆண்டுகளாக அவர் போராடி வருகிறார். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தனியாக கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு அவரது போராட்டத்தால் பெற்றுத் தரப்பட்டது. தமிழகத்தில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அவர், இதற்காக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். தமிழ் வளர்ச்சிக்காக பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையும் நிறுவியுள்ளார். பசுமைத் தாயகம் என்னும் சமூகநலச் செயல்பாடுகளில் ஈடுபடும் ஒரு தன்னார்வ அமைப்பும் நடத்தப்பட்டு வருகிறது.

பிற நிகழ்வுகள்

1261 – கான்ஸ்டன்டைன்நோபில் நகரை நிக்காயர்கள் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை அங்கு மீண்டும் நிறுவினர்.

1547 – இரண்டாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக முடிசூடினார்.
1593 – பிரான்சின் நான்காம் ஹென்றி புராட்டஸ்டண்ட் மதத்தில் இருந்து ரோமன் கத்தோலிக்கத்துக்கு பகிரங்கமாக மதம் மாறினார்.
1603 – ஸ்காட்லாந்தின் 6-ஆம் ஜேம்ஸ் பிரித்தானியாவின் முதலாவது மன்னராக முடி சூடினார்.
1799 – எகிப்தில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் 10,000 ஒட்டோமான்களை போரில் வென்றார்.
1868 – வயோமிங் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
1894 – முதலாவது சீன-ஜப்பானியப் போர் தொடங்கியது.
1898 – புவார்ட்டோ ரிக்கோ மீதான ஐக்கிய அமெரிக்காவின் படையெடுப்பு தொடங்கியது. முதலாவது அமெரிக்கப் படையினர் குவானிக்கா துறைமுகத்தில் தரையிறங்கினர்.
1907 – கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் வந்தது.
1908 – அஜினோமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது.
1925 – சோவியத் செய்தி நிறுவனம் டாஸ் நிறுவப்பட்டது.
1934 – ஆஸ்திரிய அதிபர் எங்கல்பேர்ட் டொல்ஃபஸ் நாசிகளினால் கொலை செய்யப்பட்டார்.

1939 – பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ் பிறந்த நாள்

1939 – தமிழ் திரைப்பட இயக்குநர் மகேந்திரன் பிறந்த நாள்
1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் இடம்பெற்ற நார்மண்டி சண்டையில் 5,021 கனேடியர்கள் கொல்லப்பட்டனர்.
1973 – சோவியத்தின் மார்ஸ் 5 விண்கலம் ஏவப்பட்டது.
1983 – கறுப்பு ஜூலை: கொழும்பு வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
1984 – சல்யூட் 7 விண்கலத்தில் சென்ற ரஷ்யாவின் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
1993 – இஸ்ரேல் லெபனான் மீது பெரும் தாக்குதலைத் தொடங்கியது.
1993 – மண்கிண்டிமலை ராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டது.
1993 – தென்னாப்பிரிக்காவில் சென் ஜேம்ஸ் தேவாலயத்தில் 11 மதகுருக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
1994 – இஸ்ரேலுக்கும்-ஜோர்தானுக்கும் இடையில் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

1997 – கே. ஆர். நாராயணன் இந்தியாவின் 10-வது குடியரசுத் தலைவர் ஆனார். தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்பதவியை வகித்தது இதுவே முதல் தடவை.
2000 – பிரான்சின் கான்கோர்ட் சூப்பர்சோனிக் விமானம் பாரிசில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 109 பேரும் தரையில் 4 பேரும் கொல்லப்பட்டனர்.
2007 – பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.

சிறப்பு நாள்

புவேர்ட்டோ ரிக்கோ – அரசியலமைப்பு நாள் (1952)
துனீசியா – குடியரசு நாள் (1957)

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.