திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை: முதல்வர் நலம் விசாரிப்பு


சென்னை:
கொரோனா நோய்த் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விசாரித்ரிந்தார்.

கடந்த 2-ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ. அன்பழகனுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு 80 சதவீதம் ஆக்சிஜன் வெண்டிலேட்டர் மூலமே கொடுக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் வியாழக்கிழமை தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்பழகனின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது 60 சதவீதம் ஆக்சிஜன் வென்டிலேட்டர் மூலம் வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாக அவரது உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மருத்துவமனையைத் தொடர்புகொண்டு ஜெ. அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அத்துடன் அவர் நலம் பெற வேண்டி இறைவனை வேண்டிக் கொள்வதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.