கங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா?

ஆண்டுதோறும் இந்துக்களால் விமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி.

தீபாவளி பண்டிக்கை ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி எல்லோரது வீடுகளிலும் தீபாவளி பட்சணங்கள், புத்தாடைகள் சகிதம் கொண்டாடுவதுதான் அதன் சிறப்பம்சம்.

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு இந்து மத ரீதியாக நரகாசூர வதத்தை சொல்வதுண்டு. அது எல்லோரும் அறிந்ததுதான்.

ஆனால் பண்டிகையின் மூலம் எங்கெங்கோ தொலைதூரத்தில் பிரிந்துகிடக்கும் உறவுகள் ஒன்றிணைவதற்கு வாய்ப்பையும், ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும், பண்டிகை காலத்தில் அவை குழந்தைகளை பாதிக்கக் கூடாது என துயரங்களையும், கஷ்டங்களையும் மறந்து தீபாவளியை கொண்டாடும் ஏராளமான ஏழை, நடுத்தர குடும்பங்கள் உண்டு.

தீபாவளியை அதிகாலை எழுந்து எண்ணெய் ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, பகவானுக்கு படையலிட்டு, குதூகலத்துடன் பட்டாசு வெடித்து, இனிப்புகளை அண்டை வீட்டாருக்கு வழங்கி, தொலைக்காட்சிகளில் வரும் சிறப்பு நிகழ்ச்சிகளை காணும் சந்தோஷமே அலாதிதான்.

புதிதாக திருமணமாகி தலை தீபாவளியை கொண்டாடும் தம்பதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. எப்படியும் பெண்ணுக்கு புதிய தங்க நகைகளும், பட்டுப் புடவைகளும், ஆணுக்கு பட்டாடைகளும், இன்ன பிற பரிசுகளும் குவிந்துவிடுவது இந்த தலைதீபாவளியில்தான்.

அதுபோகட்டும். தலை தீபாவளியை கொண்டாடுவோர் நரக சதுர்த்தியின்போது துலா லக்ன நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.  அப்படி குளிக்கும்போது அபாமார்கம் என அழைக்கப்படும் நாயுருவிச் செடியை 3 முறை தலையைச் சுற்றி தூர எறிந்து விடுவது சிலரது இல்லங்களில் வழக்கத்தில் உள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி கங்கா ஸ்நானம்  தீபாவளி நாளில் அதிகாலை நேரத்தில் நீராடும்போது கங்காதேவி அந்த நீரில் கலந்து கங்கை நீராவதாக ஐதீகம்.  அந்த வகையில் கங்கா ஸ்நானத்துக்கு நல்லெண்ணெயை மட்டும் பயன்படுத்த வேண்டும். நல்லெண்ணெயை உச்சி குளிர தேய்த்து வெதுவெதுப்பான நீரில் அதிகாலை நேரத்தில் விழித்தும், விழிக்காத கண்களுடன் குளிப்பது மற்றொரு அலாதி சுகம்.

எண்ணெய் குளியலை சூரிய உதயத்துக்கு முன்னதாகச் செய்யக் கூடாது என்பது சாஸ்திரம்.. ஆனால் தீபாவளி அன்று மட்டும் இந்த ஐதீகத்துக்கு விதிவிலக்கு உண்டு.

தீபாவளி எண்ணெய் குளியல் எதற்கு என்றுதானே கேட்கிறீர்கள்… நரகாசூர வதத்தின்போது, பகவான் கிருஷ்ணனிடம், தீபாவளியை கொண்டாடுவோர் தன் பிள்ளையான நரகாசூரனை அந்த நேரத்தில் நினைக்க வேண்டும். அதற்கு எண்ணெய் குளியல் செய்யும்போது நல்லெண்ணெயில் மகாலட்சுமியும், நீரில் கங்காதேவியும் எழுந்தருள வேண்டும் என்று பூமாதேவி வேண்டினாள். அவளின் விருப்பத்துக்கு பகவான் அருள்புரிந்தார். அதனால்தான் இந்த எண்ணெய் ஸ்நானம்.

இந்த எண்ணெய் குளியலுக்கான எண்ணெயை தயாரிப்பதில் கூட ஒருசில முறைகள் உண்டு. அதிகாலையில் வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி சிறிது மிளகு, சீரகம், தோலுடன் தட்டிப்போட்ட வெள்ளைப்பூண்டு, அரிசி, சிறிதளவு காய்ந்த மிளகாயை சேர்த்து மெல்லிய தீயில் காய்ச்சி இறக்கி வைப்பர். இதைத்தான் உள்ளங்கையில் ஊற்றி உச்சந்தலையில் வைத்து, சூடு பறக்க தேய்த்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் சிறிது சந்தனம், மஞ்சள் கலந்து, தலையில் உள்ள எண்ணெய் பிசுக்கு போக சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.

கங்கா ஸ்நானம் செய்வோர் தீபாவளி அன்று அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் சூரிய உதயத்துக்கு முன் அருணோதய காலத்தில் (அருணோதய காலம் என்பது சூரிய உதயத்துக்கு (காலை 6 மணி) முன் 48 நிமிடங்கள் வரையிலான காலம்).

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.